முகக் கவசம் அணியாத நபரைத் தட்டிக் கேட்டதால் தகராறு...  18 வயது இளம்பெண் உயிரிழப்பு!

0 19462

ந்திர மாநிலம், குண்டூரில் முகக்கவசம் அணியாமல் சாலையில் சுற்றித்திரிந்த நபரைத் தட்டிக் கேட்டதற்காகத் தாக்கப்பட்ட 18 வயது இளம்பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஜூலை 3 - ம் தேதி நடந்த சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குண்டூர் மாவட்டம், ரென்ட்டசின்தலா என்ற கிராமத்தில் வசிப்பவர் கர்னாடி ஏலமண்டலா. இவரது குடும்பத்தினர் சாலையில் செல்லும்போது முகக்கவசம் அணியாமல் அன்னப்பு ரெட்டி எனும் இளைஞன் அருகில் வந்திருக்கிறான். இதைக் கண்டித்தனர் ஏலமண்டலாவின் குடும்பத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஒரு சில நாள்களுக்குப் பிறகு அன்னப்பு ரெட்டி காய்கறி சந்தையில் முகக்கவசம் அணியாமல் சுற்றியிருக்கிறான். அதைப் பார்த்த ஏலமண்டலாவும் அவரது குடும்பத்தினரும் மீண்டும் முகக்கவசம் அணியும்படி சொல்லியுள்ளனர். இதனால் கோபமடைந்த அன்னப்பு ரெட்டி தனது நண்பர்கள் நால்வரை அழைத்து வந்து சண்டையிட்டிருக்கிறான். சண்டை பெரிதாக, ஏலமண்டலாவுடன் வந்த அவரது மனைவி மற்றும் மகளைக் கட்டையால் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஏலமண்டலாவின் மகள் பாத்திமாவுக்கு தலையில் அடிபட்டது. ரத்தம் வழிய அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார் பாத்திமா.

பாத்திமாவின் தந்தை காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் அன்னப்பு ரெட்டி மற்றும் அவரது நான்கு நண்பர்களும் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments